Monday, January 27, 2014

Saturday, December 14, 2013

அனைத்து தமிழ் இணைய தளங்கள் (வோர்ட்பிரஸ்) கிழே  கொடுக்கப்பட்டுள்ளன 


நன்றி! 


Wednesday, January 23, 2013ஆன்மீக வாழ்கையை நான் பேரின்பம் பெறாமல் போனால் அதற்காகப் புலனின்ப வாழ்கையை ஏன் நாட வேண்டும்? எனக்கு அமுதம் கிடைக்காமல் போனால்
அதற்காகச் சாக்கடை நீரையா நாடிச் செல்வது?
*******************************************************************************

இன்று உலகத்தில் காணப்படும் எல்லாவிதமான துன்பங்களுக்கும் காரணம், மனிதன் தன் வாழ்வின் லட்சியம் இன்பம் என்று நினைத்து, முட்டாள் தனமாக அதைத் தேடி அலைவது தான். வாழ்வின் லட்சியம் இன்பம் அல்ல, ஞானம் தான் என்று இறுதியில் அவனுக்குப் புரிகிறது.

*******************************************************************************

'ஓய்வு ஒளிவு இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இரு. ஆனால், அந்த வேலைகளில் நீ கட்டுப் பட்டு விடாதே, அதற்குள் சிக்கிக் கொள்ளாதே' என்பதே கீதையின் உபதேசமாகும்.

*******************************************************************************

நாம் எஜமானனைப்போல் வேலை செய்ய வேண்டும், அடிமையைப் போல் அல்ல. சுதந்திரமாகக் காரியங்களைச் செய்! அன்புமயமாகக் காரியங்களை செய்!


சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள் :11

Wednesday, August 1, 2012

தன்னம்பிக்கை வளர

1.மன உறுதியுடனும் உடல் உறுதியுடனும் இருங்கள்.
2.எல்லாம் நன்மைக்கே என்று எதையும் நேர் முகமாகவே (positive)  எண்ணுங்கள்.
3.ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல் படுங்கள்.
4.செய்யும் செயலைப் புதுமையான முறையில் செய்யுங்கள்.
5.பயனுள்ள எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டிருங்கள்.
6.பிரச்சினைகளை எதிர் நோக்கும்போது அமைதியாகவும் தெளிவாகவும் மனதை வைத்திருங்கள்.
7.பிறருடன் கலந்து பேசி அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.இதனால் அவர்களது அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும்.
8.வாழ்க்கையை உன்னதமான ஒன்றாகவும் உங்களை அதில் ஒரு பகுதியாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.
9.முடிந்தவரை உங்கள் குறைகள் மற்றவர்களுக்குத் தெரியுமுன் சரி செய்ய முயலுங்கள்.
10.பிறரைக் கவருங்கள்:புரிய வையுங்கள்:ஏற்றுக் கொள்ளச் செய்யுங்கள்.

Sunday, July 22, 2012

                       தன்னம்பிக்கைஉலகை பார்த்து வாழ்பவன்
சராசரி மனிதன்.
உலகமே பார்க்க வாழ்பவன்
சாதனை மனிதன்
.

இன்றைய (அ)லட்சியம்,
நாளைய (ஏ)மாற்றம்.

உன் முதுகிற்கு பின்னால் பேசுபவர்களை
பற்றி கவலைபடாதே.
நீ அவர்களுக்கு ஒரு அடி முன்னால்
இருக்கிறாய் என்று பெருமை படு.

கஷ்டபடுபவனுக்கு சிரிப்பு தெரியாது,
சிரிக்கின்றவனுக்கு கஷ்டம் தெரியாது,
கஷ்டத்திலும் சிரிக்கின்றவனுக்கு தோல்வியே கிடையாது.


இலை உதிர் காலம் வந்ததென்று
செடிகள் எல்லாம் தீகுளித்தால்
வசந்தம் வந்து வாசம் செய்ய வழியேது தோழா?
அப்துல் கலாம் பொன்மொழிகள் 
1.
நான்வாழ்வில்நல்லதொருலட்சியத்தைமேற்கொள்வேன்.
2. நன்றாகஉழைத்துபடித்து, வாழ்க்கையின்லட்சியத்தைஅடையமுயல்வேன்.
3. எனதுவிடுமுறைநாள்களில், எழுதப்படிக்கத்தெரியாத5 பேருக்குபாடம்சொல்லிக்கொடுப்பேன்.

4. எனதுவீட்டில்அல்லதுபள்ளியில்குறைந்தது5 செடிகளைநட்டுவைத்து, பாதுகாப்புமரமாக்குவேன்.

5.
மது, சூதாடுதல், போதைப்பழக்கங்களுக்குஆளாகிதுன்புறும்ஐந்துபேரையாவதுஅப்பழக்கத்திலிருந்துமீட்டு, நல்வழிப்படுத்தமுயல்வேன்.

6.
துன்பத்திலிருக்கும்ஐந்துபேரையாவதுசந்தித்து, அவர்களுக்குஆறுதல்அளித்து, துயரைத்துடைப்பேன்.

7.
ஜாதியின்பெயரால், மதத்தின்பெயரால், மொழியின்பெயரால்எவ்விதபாகுபாடும்பார்க்கமாட்டேன். எல்லோரையும்சமமாகபாவிப்பேன்.

8.
வாழ்வில்நேர்மையாகநடந்துகொண்டு, மற்றவர்களுக்குஎடுத்துக்காட்டாகஇருக்கமுயல்வேன்.

9.
என்தாய், தாய்நாட்டைநேசித்து, பெண்குலத்துக்குஉரியமரியாதையைஅளிப்பேன்.

10.
நாட்டில்அறிவுத்தீபம்ஏற்றி, அதைஅணையாததீபமாகசுடர்விடச்செய்வேன்.


சிந்தனைகள்
· நண்பனே! முதலில் மனிதனாய் இரு. பிறகு நீ விரும்புவன அனைத்தும் உன்னைப் பின் தொடர்வதை நீ காண்பாய்.
· நம்மையே நாம் நம்பாதவரை நமக்குக் கடவுள் நம்பிக்கை ஏற்படாது. உண்மையில் அனைவருள்ளும் கடவுள் இருக்கிறார்.
· மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.
· மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள்புரியட்டும் அல்லது புரியாமல் போகட்டும்; உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும், நீ மட்டும் உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு.
· மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகின்றானோ அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்தாக வேண்டும்.
· உலகப் பெரியோர்கள் வாழ்க்கையை ஆராய்ந்துப் பார்த்தால் அவர்கள் ஞான ஒளியைப் பெறுவதற்கு, இன்பத்தை விடத் துன்பமே – செல்வத்தைவிட வறுமையே – புகழை விட இகழே அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது தெரியவரும்.

சிந்தனைகள்
· நீங்கள் வெற்றி பெறுவதற்கு மிகுந்த விடாமுயற்சியையும், பெரும் மன உறுதியையும் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன் “சமுத்திரத்தைக் குடித்திடுவேன்” என்று சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழைத்தால் நீ உனது குறிக்கோளை நிச்சயம் அடைவாய்.
· மக்களுக்காகச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவன் ஆகிறான்.
· மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகிறான்.
· தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
· எப்போதும் எந்த மனிதனையும் உருப்படாதவன் என்று சொல்லாதே. அவனிடமுள்ள பழைய குணங்களை மேலும் சிறந்த புதிய பழக்க வழக்கங்களால் தடுத்து விடமுடியும்.
· ஒரே ஒரு கொள்கையை எடுத்துக் கொண்டு, அதற்காகவே உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிருந்தால் உனக்கு ஆதரவான காலம் வரும்.